பிரதமர் திரு நரேந்திர மோடி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்கை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.
இந்தியா-பூட்டான் இடையேயான தனித்துவமான நெருங்கிய நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்த பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக, இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா – பூட்டான் இடையேயான நட்புறவை சீராக்குவது தொடர்பான தொலைநோக்கு வழிகாட்டுதலை அளித்தமைக்காக, திரு மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“பூட்டான் மன்னருடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. இந்தியா-பூட்டான் இடையேயான தனித்துவமான நெருங்கிய நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்த பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நம்முடைய நட்புறவை சீராக்குவது தொடர்பான தொலைநோக்கு வழிகாட்டுதலை அளித்த அவருக்கு எனது பாராட்டை தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
——————
Had a warm meeting with His Majesty the King of Bhutan. Discussed various ideas to further strengthen the close and unique India-Bhutan friendship. Conveyed my appreciation for the guiding vision provided by successive Druk Gyalpos in shaping our relations. pic.twitter.com/cmWW41lFrK
— Narendra Modi (@narendramodi) September 14, 2022