Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகமதாபாத்தில் கட்டுமானத்தின் போது கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


அகமதாபாத்தில் கட்டுமானத்தின் போது கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் அளித்து வருவதாக திரு மோடி கூறியுள்ளார்.

 இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

அகமதாபாத்தில் கட்டுமானத்தின்போது, கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது கவலையளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் அளித்து வருகிறது: பிரதமர்

**************