Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குல்குரு சுவாமி ராஜர்ஷி முனியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


லகுலிஷ் பாரம்பரியத்தைச் சேர்ந்த குல்குரு சுவாமி ராஜர்ஷி முனியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளாக சுவாமிஜி, யோகாவுக்கு அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளதாக கூறியுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய தாம் பிரார்த்திப்பதாகவும் அவரை இழந்து வாடும் சீடர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“பிராமணராக மாறிய லகுலிஷ் பாரம்பரியத்தின் குருவான குரு சுவாமி ராஜர்ஷி முனியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக யோகாவை வளர்த்து வந்தார். அவருடைய  ஆன்மா சாந்தியடைய மனப்பூர்வமான பிரார்த்தனைகள் மற்றும் அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு இரங்கல்.”

***************

(Release ID: 1855425)