ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வு கோவாவின் பனாஜியில் நடைபெற்றது. கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவாந்த், மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். ஜென்மாஷ்டமி நன்னாளில் ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
அமிர்த காலத்தில் இந்தியா பணியாற்றி வரும் மாபெரும் இலக்குகள் தொடர்பான, 3 முக்கிய மைல்கல்கள். இந்தியாவிற்கு பெருமிதம் என்பதை பிரதமர் பகிர்ந்துகொண்டார். “முதலாவதாக, நாட்டில் 10 கோடி ஊரக வீடுகள் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் அரசின் இயக்கம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. “அனைவரின் முயற்சி” என்பதற்கான மாபெரும் உதாரணமாக, இது உள்ளது.” என்று அவர் கூறினார். இரண்டாவதாக, ஒவ்வொரு வீடும் குடிநீர் குழாய் மூலம் இணைக்கப்பட்ட முதலாவது வீட்டுக்கு வீடு குடிநீர் சான்றிதழ் பெற்ற மாநிலமாக மாறியிருக்கும் கோவாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். “இந்த சாதனையை எட்டிய முதலாவது யூனி்யன் பிரதேசங்களாக தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டியூ மாறியிருப்பதையும், அவர் அங்கீகரித்தார். தங்களின் முயற்சிகளுக்காக பொதுமக்களையும், அரசையும், உள்ளாட்சி அமைப்புகளையும் பிரதமர் பாராட்டினார். இந்த பட்டியலில், மேலும் பல மாநிலங்கள், விரைவில் இணையவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒரு லட்சம் கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காதவையாக மாறியிருப்பதை மூன்றாவது சாதனையாக பிரதமர் தெரிவித்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன், திறந்தவெளியில் மலம் கழிக்காத நாடு என அறிவிக்கப்பட்ட பின், அடுத்த தீர்மானம் கிராமங்களுக்கு இதனினும், கூடுதல் அந்தஸ்தை தருவதாக இருந்தது. அதாவது, இவை பொதுக்கழிப்பிடங்களையும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை, கால்நடை கழிவுகள் மேலாண்மை ஆகியவற்றையும் கொண்டிருக்கவேண்டும்.
உலகம் எதிர்கொண்டுள்ள குடிநீர் பாதுகாப்பு சவாலை சுட்டிக்காட்டிய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதில், குடிநீர் தட்டுப்பாடு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்றார். “குடிநீர் பாதுகாப்பு திட்டங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக, எமது அரசு இடைவிடாது பணியாற்றி வருகிறது” என்று அவர் கூறினார். குறுகிய கால சுயநல அணுகுமுறைக்கு மாறாக, நீண்ட கால அணுகுமுறையின் அவசியம் பற்றி எடுத்துரைத்த பிரதமர், “ஒரு நாட்டை கட்டமைக்க ஒருவர் பணியாற்றும் அளவுக்கு ஒரு அரசை அமைக்க ஒருவர் அவ்வளவு கடினமாக, பணி செய்ய வேண்டியிருக்காது என்பது தான் உண்மையாகும். நாட்டின் கட்டமைப்புக்கு நாம் அனைவரும், பணியாற்ற தீர்மானித்திருக்கிறோம். இதனால் தான், நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்களை நோக்கி நாம் பணியாற்றுகிறோம்” என்பதை வலியுறுத்தினார். “நாட்டைப்பற்றிய அக்கறை இல்லாதவர்கள், நாட்டின் நிகழ்காலம் அல்லது எதிர்காலம் சீரழிக்கப்படுவதை பற்றியும் கவலைப்படாதவர்கள். இத்தகையவர்கள் நிச்சயம் பெரிதாக பேசுவார்கள். ஆனால் குடிநீருக்காக பெரிய தொலைநோக்குப் பார்வையோடு ஒரு போதும் பணிபுரிவதில்லை” என்று அவர் கூறினார்.
தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசின் பன்முக அணுகுமுறையைப் பற்றிப் பேசிய பிரதமர், ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள், நதிகள் இணைப்பு மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற மழைநீரை சேமிக்கும் அடல் புஜால் திட்ட முன்முயற்சிகளை பட்டியலிட்டார். இந்தியாவில் ராம்சர் சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 50 கடந்த 8 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“அமிர்தகாலம் போல ஒரு சிறந்த தொடக்கம் இருக்க முடியாது”, என்று கூறிய பிரதமர், 7 கோடி கிராமப்புற குடும்பங்களை வெறும் 3 ஆண்டுகளில் குழாய் நீருடன் இணைக்கும் சாதனையைப் பாராட்டினார், அதேசமயம் சுதந்திரம் அடைந்த 7 தசாப்தங்களில் 3 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது. “நாட்டில் சுமார் 16 கோடி கிராமப்புற குடும்பங்கள் உள்ளன, அவர்கள் தண்ணீருக்காக வெளி ஆதாரங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இந்த அடிப்படைத் தேவைக்காகப் போராடும் கிராமத்தின் இவ்வளவு பெரிய மக்களை நாம் விட்டு வைத்திருக்க முடியாது. அதனால்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே செங்கோட்டையில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் தண்ணீர் கிடைக்கும் என்று அறிவித்தேன். இந்த பிரச்சாரத்திற்காக 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 100 ஆண்டுகளில் காணாத மிகப்பெரிய தொற்றுநோயால் குறுக்கீடுகள் ஏற்பட்ட போதிலும், இந்த பிரச்சாரத்தின் வேகம் குறையவில்லை. இந்த தொடர் முயற்சியின் பலன், 7 தசாப்தங்களில் செய்த பணிகளை, வெறும் 3 ஆண்டுகளில், நாடு இரண்டு மடங்குக்கு மேல் செய்துள்ளது. செங்கோட்டையில் இருந்து நான் இந்த முறை பேசிய அதே மனித மைய வளர்ச்சிக்கு இது ஒரு உதாரணமாகும்” என்று அவர் தெரிவித்தார்.
வருங்கால சந்ததியினருக்கும், பெண்களுக்கும் வீடுதோறும் தண்ணீர் திட்டம் ஏற்படுத்தியுள்ள நன்மையை பிரதமர் எடுத்துரைத்தார். தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளில் முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்பதால், அரசின் முயற்சிகளில் பெண்களே முதன்மையாக உள்ளனர் என்றார். இது பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், நீர் நிர்வாகத்தில் அவர்களுக்கு முக்கிய பங்கை அளிக்கிறது. “ஜல் ஜீவன் இயக்கம் என்பது வெறும் அரசாங்கத் திட்டம் அல்ல, இது சமூகத்தால், சமூகத்திற்காக நடத்தப்படும் திட்டம்”, என்று பிரதமர் தெரிவித்தார்.
மக்களின் பங்கேற்பு, திட்டம் தொடர்பானவர்கள் பங்கேற்பு, அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகிய நான்கு தூண்கள் ஜல் ஜீவன் இயக்கத்தின் வெற்றியின் அடிப்படையில் உள்ளன என்று பிரதமர் கூறினார். உள்ளூர் மக்கள், கிராம சபைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் பிற நிறுவனங்களுக்கு பிரச்சாரத்தில் முதன்மையான பங்கு வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் பெண்கள் தண்ணீர் பரிசோதனைக்கு பயிற்சி பெற்றவர்கள் என்பதுடன், தண்ணீர் குழுக்களின் உறுப்பினர்களாகவும் உள்ளனர். பஞ்சாயத்துகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அமைச்சகங்களும் காட்டும் ஆர்வத்தில் பங்குதாரர்களின் பங்களிப்பு தெளிவாக உள்ளது. அதேபோல், கடந்த 7 தசாப்தங்களில் சாதித்ததை விட, வெறும் 7 ஆண்டுகளில் சாதித்திருப்பது அரசியல் உறுதிப்பாட்டை விளக்குகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவற்றுடன் ஒருங்கிணைப்பதில் வளங்களின் உகந்த பயன்பாடு பிரதிபலிக்கிறது. குழாய் நீரின் செறிவூட்டல் எந்தவொரு பாகுபாடும் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் நீக்கும், என்று பிரதமர் தெரிவித்தார்.
தண்ணீர் சொத்துக்களை புவி-குறியிடுதல், நீர் வழங்கல் மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கான தீர்வுகளை இணையம் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர், மக்கள் சக்தி, பெண்கள் சக்தி மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தி ஆகியவை ஜல் ஜீவன் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.

***************
(Release ID: 1853099)
Addressing the #HarGharJalUtsav being held in Goa. https://t.co/eUGHgaHMB1
— Narendra Modi (@narendramodi) August 19, 2022
देश भर में श्रीकृष्ण जन्माष्टमी की धूम है।
— PMO India (@PMOIndia) August 19, 2022
सभी देशवासियों को, दुनियाभर में फैले भगवान श्रीकृष्ण के भक्तों को बहुत-बहुत बधाई: PM @narendramodi
आज मैं सभी देशवासियों के साथ देश की तीन बड़ी उपलब्धियों को साझा करना चाहता हूं।
— PMO India (@PMOIndia) August 19, 2022
भारत की इन उपलब्धियों के बारे में जानकर हर देशवासी को बहुत गर्व होगा।
अमृतकाल में भारत जिन विशाल लक्ष्यों पर काम कर रहा है, उससे जुड़े तीन अहम पड़ाव हमने आज पार किए हैं: PM @narendramodi
आज देश के 10 करोड़ ग्रामीण परिवार पाइप से स्वच्छ पानी की सुविधा से जुड़ चुके हैं।
— PMO India (@PMOIndia) August 19, 2022
ये घर जल पहुंचाने की सरकार के अभियान की एक बड़ी सफलता है।
ये सबका प्रयास का एक बेहतरीन उदाहरण है: PM @narendramodi
देश ने और विशेषकर गोवा ने आज एक उपलब्धि हासिल की है।
— PMO India (@PMOIndia) August 19, 2022
आज गोवा देश का पहला राज्य बना है, जिसे हर घर जल सर्टिफाई किया गया है।
दादरा नगर हवेली एवं दमन और दीव भी, हर घर जल सर्टिफाइड केंद्र शासित राज्य बन गए हैं: PM
देश की तीसरी उपलब्धि स्वच्छ भारत अभियान से जुड़ी है।
— PMO India (@PMOIndia) August 19, 2022
कुछ साल पहले सभी देशवासियों के प्रयासों से, देश खुले में शौच से मुक्त घोषित हुआ था।
इसके बाद हमने संकल्प लिया था कि गांवों को ODF प्लस बनाएंगे: PM @narendramodi
इसको लेकर भी देश ने अहम माइलस्टोन हासिल किया है।
— PMO India (@PMOIndia) August 19, 2022
अब देश के अलग-अलग राज्यों के एक लाख से ज्यादा गांव ODF प्लस हो चुके हैं: PM @narendramodi
सरकार बनाने के लिए उतनी मेहनत नहीं करनी पड़ती, लेकिन देश बनाने के लिए कड़ी मेहनत करनी होती है।
— PMO India (@PMOIndia) August 19, 2022
हम सभी ने देश बनाने का रास्ता चुना है, इसलिए देश की वर्तमान और भविष्य की चुनौतियों का लगातार समाधान कर रहे हैं: PM @narendramodi
भारत में अब रामसर साइट्स यानि wetlands की संख्या भी बढ़कर 75 हो गई है।
— PMO India (@PMOIndia) August 19, 2022
इनमें से भी 50 साइट्स पिछले 8 वर्षों में ही जोड़ी गई हैं।
यानि water security के लिए भारत चौतरफा प्रयास कर रहा है और इसके हर दिशा में नतीजे भी मिल रहे हैं: PM @narendramodi
सिर्फ 3 साल के भीतर जल जीवन मिशन के तहत 7 करोड़ ग्रामीण परिवारों को पाइप के पानी की सुविधा से जोड़ा गया है।
— PMO India (@PMOIndia) August 19, 2022
ये कोई सामान्य उपलब्धि नहीं है।
आज़ादी के 7 दशकों में देश के सिर्फ 3 करोड़ ग्रामीण परिवारों के पास ही पाइप से पानी की सुविधा उपलब्ध थी: PM @narendramodi
जल जीवन मिशन की सफलता की वजह उसके चार मजबूत स्तंभ हैं।
— PMO India (@PMOIndia) August 19, 2022
पहला- जनभागीदारी, People’s Participation
दूसरा- साझेदारी, हर Stakeholder की Partnership
तीसरा- राजनीतिक इच्छाशक्ति, Political Will
और चौथा- संसाधनों का पूरा इस्तेमाल- Optimum utilisation of Resources: PM @narendramodi
Three accomplishments that will make every Indian proud! pic.twitter.com/naVsuWt6OY
— Narendra Modi (@narendramodi) August 19, 2022
Water security matters and here is how we are furthering it in India. pic.twitter.com/eEr8tUwH3V
— Narendra Modi (@narendramodi) August 19, 2022
The success of Jal Jeevan Mission is based on:
— Narendra Modi (@narendramodi) August 19, 2022
People’s participation.
Partnership with all stakeholders.
Political will.
Optimum utilisation of all resources. pic.twitter.com/WdrK6bEEN0