Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் அதிகரிக்கப்பட்ட கடனுதவிக்கான நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் 4.5 லட்சம் கோடி ரூபாய், 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக, விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதால், கடனுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அவசர கால கடனுதவி திட்டம்  31.3.2023 வரை செல்லுபடியாகும்.

இத்திட்டத்தின் கீழ் 5.08.2022 வரை 3.67 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852527

***************