Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா கெலாட்டிற்கு பிரதமர் வாழ்த்து


பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இன் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா கெலாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:

“மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா கெலாட்டிற்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் துணிச்சலாகப் போராடி, தலைசிறந்த உயரிய நுட்பத்தை அவர் வெளிப்படுத்தினார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள். #Cheer4India”