திட்டங்களின் ஆய்வு:
1. நிரந்தர வேலைகளின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வரும் கிரேட்டர் மேல் இணைப்பு திட்டத்தின் முதல் கான்கிரீட் ஊற்றுதல்.
2. 227 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற இந்தியாவின் நிதி உதவியுடன் ஹுல்ஹுமாலே-வில் அமைக்கப்பட்டு வரும் 4000 சமூக வீடுகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு.
3. இந்திய மாலத்தீவு மேம்பாட்டு ஒத்துழைப்பின் வளர்ச்சி நிலை.
ஒப்பந்தங்கள்/ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்:
1. இந்தியாவின் தேசிய ஊரக மேம்பாட்டுக் கழகம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் மாலத்தீவின் உள்ளூர் அரசு ஆணையத்திற்கு இடையே உள்ளூர் மன்றங்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்களுக்கு திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
2. பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம், மாலத்தீவின் மீன்வள அமைச்சகம் இடையே சாத்தியமான மீன்பிடி மண்டல முன்னறிவிப்பு திறன் மேம்பாடு மற்றும் தரவு பகிர்வு, கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3. இந்தியா மற்றும் மாலத்தீவின் தேசிய பேரிடர் மேலாண்ம ஆணையங்களிடையே பேரிடர் மேலாண்மைத் துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4. மாலத்தீவில் காவல் உள்கட்டமைப்பிற்காக 41 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிப்பதற்கு இந்தியாவின் எக்ஸிம் வங்கி மற்றும் மாலத்தீவின் நிதியமைச்சகம் இடையே ஒப்பந்தம்.
அறிவிப்புகள்:
1. மாலத்தீவின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு கூடுதலாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்.
2. 128 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஹனிமதூ விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதற்கான அனுமதி.
3. 324 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் குல்ஹிஃபஹ்லு துறைமுக மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்பந்த புள்ளி தொடங்குவதற்கான அனுமதி.
4. மாலத்தீவில் இருந்து இந்தியாவிற்கு வரியில்லா சூரை மீன் ஏற்றுமதிக்கு அனுமதி.
5. மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படைக்கு ஏற்கனவே வழங்கியிருந்த ஹுராவி கப்பலுக்கு பதிலாக, மாற்று கப்பல் வழங்குவது.
6. மாலத்தீவு தேசிய பாதுகாப்புப்படைக்கு 24 பயன்பாட்டு வாகனங்களை அன்பளிப்பாக வழங்குதல்.
*****
(Release ID: 1847628)