1. தாமாகவே முன்வந்து வெளியிடுதல்: 2005 – ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4 (1) (b) –ன் கீழ் வரும் அனைத்து அம்சங்களுக்கும் பிரதமர் அலுவலகம் உட்பட்டு தாமாகவே முன்வந்து அனைத்து தகவல்களையும் தனது வலைதளத்தில் வெளியிடுகிறது. அதனைக் காண இங்கு கிளிக். செய்யவும். இந்தத் தகவல் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது சீரமைத்துப் புதுப்பிக்கப்படுகிறது. சில வகையான தகவல்கள் தேவைப்படும் போதெல்லாம் சீரமைத்துப் புதுப்பிக்கப்படுகிறது.
2. குறிப்பிட்ட நபர் அல்லது நபர்களைப் பாதிக்கும் முடிவுகள் குறித்து காரணங்களைத் தெரிவித்தல்: பொது மக்கள் அனைவரையும் பாதிக்கக் கூடிய முக்கியமான முடிவுகள் சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகங்கள் / துறைகள் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அமைச்சகங்கள் / துறைகள் போல அன்றி குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட குழுவின் நபர்களை பாதிக்கக் கூடிய எவ்வித நிர்வாகம் சார்ந்த அல்லது ஓரளவு நீதியியல் சார்ந்த முடிவுகள் பொதுவாக பிரதமர் அலுவலகத்தில் எடுக்கப்படுவதில்லை.
3. தகவல்களை மிக விரிவாகப் பரப்புதல்: தகவல்களைப் பொது மக்களுக்கு மிகவும் விரிவான முறையில் பரப்புவதற்கு பிரதமர் அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்களுக்கு கிடைப்பதற்கென வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழ்க்கண்டவற்றில் காணக்கிடக்கின்றன:
(a) செய்திக் குறிப்புகள் மூலம் வெளியிடப்படும் மாண்புமிகு பிரதமரின் அறிக்கைகள்
(b) பிரதமரின் உரைகள்
(c) சமூக ஊடகங்களின் மூலமான கருத்துப் பரிமாற்றம்: Tweets and Facebook
(d) மனதின் குரல் (மன் கீ பாத்)
(e) செய்தி வெளியீடுகள்
(f) அரசின் சாதனைகள் மற்றும் அமைச்சரவை முடிவுகள்
(g) இந்தியாவை மாற்றி அமைத்தல்
4. பல்வேறு மொழிகளில் தகவல்கள் கிடைக்கச் செய்தல்: பிரதமர் அலுவலக வலைதளம் 11 மொழிகளில் கிடைக்கிறது.
5. முக்கியக் கொள்கைகள் வரையும் போதோ அல்லது பொது மக்களைப் பாதிக்கக் கூடிய முடிவுகளை அறிவிக்கும் போது தொடர்புடைய உண்மைகள்:: முக்கியக் கொள்கைகள் வரைதல் அல்லது பொது மக்களைப் பாதிக்கக் கூடிய முடிவுகள் ஆகியன சம்மந்தப்பட்ட நிர்வாக அமைச்சகங்கள் / துறைகள் அதிகார வரம்பில் வருபவை.