எனது அமைச்சரவைத் தோழர்களே, பல்வேறு மாநிலங்களின் மதிப்புக்குரிய முதலமைச்சர்களே, மின்சாரத்துறையுடன் தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர்களே, வணக்கம்!
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி மற்றும் மின் துறைகளுக்கு பெரும் பங்கு உள்ளது. எரிசக்தித் துறையின் பலம், தொழில் தொடங்குவதற்கும், எளிதாக வாழ்வதற்கும் முக்கியமானது. இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள், மாவட்டத்தின் பசுமை ஆற்றல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பின் திசையில் குறிப்பிடத்தக்க படிகள். இந்தத் திட்டங்கள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள், அர்ப்பணிப்பு மற்றும் அதன் பசுமை இயக்கத்தின் அபிலாஷைகளை வலுப்படுத்தும். லடாக் மற்றும் குஜராத்தில் இரண்டு பெரிய பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கான பணிகள் இன்று தொடங்குகின்றன. லடாக்கில் அமைக்கப்படும் ஆலை, நாட்டில் உள்ள வாகனங்களுக்கு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும். பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதை சாத்தியமாக்கும் நாட்டின் முதல் திட்டமாக இது இருக்கும். எரிபொருள் மின்கலங்களைக் கொண்ட மின்சார வாகனங்கள் இயங்கத் தொடங்கும் நாட்டின் முதல் இடமாக லடாக் விரைவில் இருக்கும். இது லடாக்கை கார்பன் அற்ற பிராந்தியமாக மாற்ற உதவும்.
பெட்ரோல் மற்றும் விமான எரிபொருளில் எத்தனால் கலப்புக்குப் பிறகு, தற்போது இயற்கை எரிவாயு குழாய்களில் பசுமை ஹைட்ரஜனை கலப்பதை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. இது இயற்கை எரிவாயு மீதான இறக்குமதி சார்பைக் குறைக்கும்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மின்துறையின் ஒவ்வொரு பகுதியையும் மாற்றியமைக்க அரசு முன்முயற்சி எடுத்தது. மின் அமைப்பை மேம்படுத்த உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் இணைப்பு ஆகிய நான்கு வெவ்வேறு பிரிவுகள் ஒன்றாகச் செயல்பட்டன. கடந்த 8 ஆண்டுகளில், நாட்டில் 1,70,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே மின் உற்பத்தித் திட்டம் இன்று நாட்டின் பலமாக மாறியுள்ளது. முழு நாட்டையும் இணைக்கும் வகையில் சுமார் 1,70,000 சுற்று கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள் போடப்பட்டுள்ளன. மேலும், சௌபாக்யா திட்டத்தின் கீழ் 3 கோடி இணைப்புகளை வழங்குவதன் மூலம், செறிவூட்டல் இலக்கை நெருங்கி உள்ளோம்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இன்று நாம் இந்த இலக்கை நெருங்கிவிட்டோம். இதுவரை, புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து சுமார் 170 ஜிகாவாட் திறன் நிறுவப்பட்டுள்ளது. இன்று, நிறுவப்பட்ட சூரிய சக்தியின் அடிப்படையில் உலகின் முதல் 4-5 நாடுகளில் இந்தியா உள்ளது. உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் பல இன்று இந்தியாவில் உள்ளன. நாட்டில் இன்று மேலும் இரண்டு பெரிய சூரியசக்தி ஆலைகள் கிடைத்துள்ளன. தெலுங்கானா மற்றும் கேரளாவில் கட்டப்பட்ட இந்த ஆலைகள் நாட்டிலேயே முதல் மற்றும் இரண்டாவது பெரிய மிதக்கும் சூரியசக்தி ஆலைகள் ஆகும். வீடுகளில் சூரியசக்தி தகடுகள் அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது..
மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுடன், மின்சாரத்தை சேமிப்பதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மின்சாரத்தை சேமிப்பது என்பது எதிர்காலத்தை வளமாக்குவதாகும். பிரதமர் குசும் திட்டம் இதற்கு சிறந்த உதாரணம். விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்ப் வசதி செய்து தருகிறோம், வயல்களின் ஓரத்தில் சூரியசக்தி தகடுகள் அமைக்க உதவுகிறோம்.
நாட்டில் மின் நுகர்வு மற்றும் கட்டணங்களைக் குறைப்பதிலும் உஜாலா திட்டம் பெரும் பங்காற்றியுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மின்கட்டணத்தில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்படுகிறது.
நமது விநியோகத் துறையில் இழப்பு இரட்டை இலக்கத்தில் உள்ளது. அதேசமயம் உலகின் வளர்ந்த நாடுகளில் இது ஒற்றை இலக்கத்தில் உள்ளது. அதாவது, நமக்கு மின்சாரம் விரயமாகிறது, எனவே மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். பல மாநிலங்களில் விநியோகம் மற்றும் பரிமாற்ற இழப்புகளை குறைப்பதில் முதலீடு பற்றாக்குறை உள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை உள்ளது என்பதை அறிந்து மக்கள் ஆச்சரியப்படுவார்கள். இந்தப் பணத்தை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பல அரசுத் துறைகள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து மின் பகிர்மான நிறுவனங்கள் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் மின்சாரத்திற்கான மானியத்திற்காக கட்டப்பட்ட பணத்தைக் கூட இந்த நிறுவனங்களால் உரிய நேரத்தில் முழுமையாகப் பெற முடியவில்லை. இந்த நிலுவைத் தொகையும் ரூ.75,000 கோடிக்கு மேல் உள்ளது. மின் உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்களின் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சிக்கியுள்ளது.
நிலுவையில் உள்ள மாநிலங்கள், அவற்றை விரைவில் தீர்க்கவேண்டும். மேலும், நாட்டு மக்கள் நேர்மையாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும்போதும், சில மாநிலங்கள் மீண்டும் மீண்டும் நிலுவைத் தொகையை ஏன் செலுத்துகின்றன என்பதற்கான காரணங்களை நேர்மையாகச் சிந்தித்துப் பாருங்கள்? இது அரசியல் தொடர்பான விஷயம் அல்ல, நாட்டு நிதி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பானது.
மின்சாரத் துறையின் ஆரோக்கியம் அனைவரின் பொறுப்பு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.
*********
Numerous path breaking reforms have transformed the power sector in the last eight years. https://t.co/lkAwx84tgJ
— Narendra Modi (@narendramodi) July 30, 2022
अगले 25 वर्षों में भारत की प्रगति को गति देने में एनर्जी सेक्टर, पावर सेक्टर की बहुत बड़ी भूमिका है।
— PMO India (@PMOIndia) July 30, 2022
एनर्जी सेक्टर की मजबूती Ease of Doing Business के लिए भी जरूरी है और Ease of Living के लिए भी उतनी ही अहम है: PM @narendramodi
लद्दाख और गुजरात में ग्रीन हाइड्रोजन के दो बड़े projects पर आज से काम शुरु हो रहा है।
— PMO India (@PMOIndia) July 30, 2022
लद्दाख में लग रहा प्लांट देश में गाड़ियों के लिए ग्रीन हाईड्रोजन का उत्पादन करेगा।
ये देश का पहला project होगा जो ग्रीन हाइड्रोजन आधारित ट्रांसपोर्ट के कमर्शियल इस्तेमाल को संभव बनाएगा: PM
8 साल पहले हमने देश के पावर सेक्टर के हर अंग को ट्रांसफॉर्म करने का बीड़ा उठाया।
— PMO India (@PMOIndia) July 30, 2022
बिजली व्यवस्था सुधारने के लिए चार अलग-अलग दिशाओं में एक साथ काम किया गया- Generation, Transmission, Distribution और Connection: PM @narendramodi
पिछले 8 वर्षों में देश में लगभग 1 लाख 70 हज़ार मेगावाट बिजली उत्पादन की क्षमता जोड़ी गई है।
— PMO India (@PMOIndia) July 30, 2022
वन नेशन वन पावर ग्रिड आज देश की ताकत बन चुका है।
पूरे देश को जोड़ने के लिए लगभग 1 लाख 70 हज़ार सर्किट किलोमीटर ट्रांसमिशन लाइन्स बिछाई गईं हैं: PM @narendramodi
हमने आज़ादी के 75 साल पूरे होने तक 175 गीगावॉट रीन्युएबल एनर्जी कैपेसिटी तैयार करने का संकल्प लिया था।
— PMO India (@PMOIndia) July 30, 2022
आज हम इस लक्ष्य के करीब पहुँच चुके हैं।
अभी तक non fossil sources से लगभग 170 गीगावॉट कैपेसिटी install की जा चुकी है: PM @narendramodi
आज installed solar capacity के मामले में भारत, दुनिया के टॉप 4-5 देशों में है।
— PMO India (@PMOIndia) July 30, 2022
दुनिया के सबसे बड़े सोलर पावर प्लांट्स में से अनेक आज भारत में हैं: PM @narendramodi
इसी कड़ी में आज दो और बड़े सोलर प्लांट्स देश को मिले हैं।
— PMO India (@PMOIndia) July 30, 2022
तेलंगाना और केरला में बने ये प्लांट्स देश के पहले और दूसरे नंबर के सबसे बड़े फ्लोटिंग सोलर प्लांट्स हैं: PM @narendramodi
सरकार का जोर बिजली का उत्पादन बढ़ाने के साथ ही, बिजली की बचत करने पर भी है।
— PMO India (@PMOIndia) July 30, 2022
बिजली बचाना यानि भविष्य सजाना।
पीएम कुसुम योजना इसका एक बेहतरीन उदाहरण है।
हम किसानों को सोलर पंप की सुविधा दे रहे हैं, खेतों के किनारे सोलर पैनल लगाने में मदद कर रहे हैं: PM @narendramodi
समय के साथ हमारी राजनीति में एक गंभीर विकार आता गया है।
— PMO India (@PMOIndia) July 30, 2022
राजनीति में जनता को सच बताने का साहस होना चाहिए, लेकिन हम देखतें हैं कि कुछ राज्यों में इससे बचने की कोशिश होती है: PM @narendramodi
ये रणनीति तात्कालिक रूप से अच्छी राजनीति लग सकती है।
— PMO India (@PMOIndia) July 30, 2022
लेकिन ये आज के सच को, आज की चुनौतियों को, कल के लिए, अपने बच्चों के लिए, अपनी भावी पीढ़ियों के लिए टालने जैसा है: PM @narendramodi
हमारे Distribution Sector के Losses डबल डिजिट में हैं। जबकि दुनिया के विकसित देशों में ये सिंगल डिजिट में है।
— PMO India (@PMOIndia) July 30, 2022
इसका मतलब ये है कि हमारे यहां बिजली की बर्बादी बहुत है और इसलिए बिजली की डिमांड पूरी करने के लिए हमें ज़रूरत से कहीं अधिक बिजली पैदा करनी पड़ती है: PM @narendramodi
देश को ये जानकर हैरानी होगी कि अलग-अलग राज्यों का 1 लाख करोड़ रुपए से अधिक का बकाया है।
— PMO India (@PMOIndia) July 30, 2022
ये पैसा उन्हें पावर जेनरेशन कंपनियों को देना है।
पावर डिस्ट्रिब्यूशन कंपनियों का अनेक सरकारी विभागों पर, स्थानीय निकायों पर भी 60 हज़ार करोड़ रुपए से अधिक बकाया है: PM @narendramodi
अलग-अलग राज्यों में बिजली पर सब्सिडी का जो कमिटमेंट किया गया है, वो पैसा भी इन कंपनियों को समय पर और पूरा नहीं मिल पाता।
— PMO India (@PMOIndia) July 30, 2022
ये बकाया भी 75 हज़ार करोड़ रुपए से अधिक का है।
यानि बिजली बनाने से लेकर घर-घर पहुंचाने तक का ज़िम्मा जिनका है, उनका लगभग ढाई लाख करोड़ रुपए फंसा हुआ है: PM
जिन राज्यों के dues pending हैं, मेरा उनसे आग्रह है कि वे जितना जल्दी संभव हो सके, क्लीयर करें।
— PMO India (@PMOIndia) July 30, 2022
साथ ही उन कारणों पर भी ईमानदारी से विचार करें कि जब देशवासी ईमानदारी से अपना बिजली का बिल चुकाते हैं, तब भी कुछ राज्यों का बार-बार बकाया क्यों रहता है? - PM @narendramodi