மதிப்பிற்குரிய துறவிகளே, சாரதா மடத்தின் சாத்வீ அன்னையரே, சிறப்பு விருந்தினர்களே, சாத்வீக உணர்வுமிக்க இந்த நிகழ்ச்சியில் குழுமியுள்ள பக்தர்களே! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
புனித துறவிகளின் வழிகாட்டுதலின் கீழ் சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட முறையில் எனக்கு பல்வேறு உணர்ச்சிகள் மற்றும் நினைவலைகள் மிகுந்ததாக உள்ளது. இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சுவாமிஜி ஏறத்தாழ 100 வயது ஆகும் போது, இறைவனடி சேர்ந்தார். எப்போதும் அவரது ஆசிகளை பெற்ற நான், அவருடன் மிக நெருக்கமாக இருக்கும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றேன். அவரது வாழ்நாளின் இறுதிவரை அவருடன் தொடர்பில் இருக்கும் பாக்கியமும், கிடைக்கப்பெற்றேன். ஒரு குழந்தையிடம் அன்பு காட்டுவதைப்போல, அவர் என்மீது பாசமழை பொழிந்தார். அவர் இறுதி மூச்சை விடும்வரை என்னை வாழ்த்திக்கொண்டு இருந்தார். சுவாமிஜி மகராஜ், ஆத்மரீதியாக இப்போதும் என்னை வாழ்த்திக்கொண்டு இருப்பதாக நான் உணர்கிறேன். படக்கதையாக தயாரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு மற்றும் ஆவணப்படத்தை இன்று வெளியிட்டு இருப்பதன் வாயிலாக அவரது வாழ்க்கையின் குறிக்கோள்களை மக்களிடம் எடுத்துச்செல்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த பணிகளை மேற்கொண்டதற்காக, ராமகிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் பூஜ்ய சுவாமி ஸ்மரானநந்தா மகராஜ் அவர்களே நான் மனதார பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான பூஜ்ய சுவாமி விஜ்னாநந்தாவால், அறிமுகப்படுத்தப்பட்டவர் சுவாமி ஆத்மஸ்தானந்தா. சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரை போன்று ஞானம் பெற்றவரிடம், ஆன்மீக சக்தியை தெளிவாக உணரலாம். நம்நாட்டின் சன்னியாசிகளுக்கு சிறந்த பாரம்பரியம் உள்ளதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். சன்னியாசத்தில் ஏராளமான வகைகள் உள்ளன. வன்பிரஸ்தா ஆசிரமம் சன்னியாசத்திற்கான ஒரு படியாக கருதப்படுகிறது.
ஒருவரை விட, மேலோங்கி நிற்பதே சன்னியாசம் என்பதன் பொருளாகும். ஆன்மாவின் சேவையில், இறைவனின் சேவையை காண்பது, அதாவது, ஒரு தனி நபரில் சிவபெருமானை காண்பது தான் ஒரு சன்னியாசிக்கு முக்கியமானதாகும்.
நண்பர்களே!
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதிசங்கரர் அல்லது தற்காலத்தைச்சேர்ந்த சுவாமி விவேகானந்தராக இருந்தாலும், “ஒன்றுபட்ட பாரதம் வலிமையான பாரதம்” என்பதே மகான்களின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ராமகிருஷ்ணா மிஷனும் அந்த நோக்கத்துடன் தொடர்புடையதாகும். சுவாமி விவேகானந்தரும், இந்த உறுதியுடன் தான் ஒரு இயக்கமாக வாழ்ந்தார். அவர் வங்காளத்தில் பிறந்தவர். ஆனால், நீங்கள் நாட்டின் எந்தபகுதிக்குச் சென்றாலும், விவேகானந்தர் வசிக்காத அல்லது அவரது தாக்கம் ஏற்படாத பகுதியை காணாமல் இருக்கமுடியாது. ராமகிருஷ்ணா மிஷனின் இந்த நோக்கத்தைத் தான் சுவாமி ஆத்மஸ்தானந்தா முன்னெடுத்துச்சென்றார். கட்ச் நிலநடுக்கத்தின் போது, துளி நேரத்தையும் வீணடிக்காமல், அங்குள்ள நிலவரம் குறித்து என்னுடன் விவாதித்த அவர், அப்பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். அந்த வகையில், ராமகிருஷ்ணா மிஷன் நாட்டில் தேச ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கிறது.
நண்பர்களே! ராமகிருஷ்ணா மிஷனின் விழிப்புணர்வு, சுவாமி ராமாகிருஷ்ணா பரமஹம்சரைபோன்ற தெய்வீக உருவின் ஆன்மீக நடைமுறை வாயிலாக வெளிப்படுகிறது. காளி தேவியின் தீர்க்கமான தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஒரு மகான் தான் சுவாமி ராமகிருஷ்ண பரம்மஹம்சர். அன்னை காளிதேவியை உணர்ந்த சுவாமி விவேகானந்தரிடம் அசாத்திய சக்தியும், உத்வேகமும் காணப்பட்டது.
அந்த வகையில், இந்த நாடு நமது மகான்களின் வாழ்த்துக்கள் மற்றும் உத்வேகத்தைத் தொடர்ந்து பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுதந்திர அமிர்த பெருவிழா நாட்டில் கடமை உணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் வெற்றிப்பெற்றுள்ளது. நம் அனைவரின் கூட்டு பங்களிப்பு பெரும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த உணர்வோடு அனைத்து துறவிகளையும், மீண்டும் ஒரு முறை வணங்குகிறேன்.
நன்றிகள் பல!
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில் செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840509
*****
Tributes to Swami Atmasthananda Ji on his birth centenary. https://t.co/EKKExOGbll
— Narendra Modi (@narendramodi) July 10, 2022
स्वामी आत्मस्थानानन्द जी को श्री रामकृष्ण परमहंस के शिष्य, पूज्य स्वामी विजनानन्द जी से दीक्षा मिली थी।
— PMO India (@PMOIndia) July 10, 2022
स्वामी रामकृष्ण परमहंस जैसे संत का वो जाग्रत बोध, वो आध्यात्मिक ऊर्जा उनमें स्पष्ट झलकती थी: PM @narendramodi
सन्यासी के लिए जीव सेवा में प्रभु सेवा को देखना, जीव में शिव को देखना, यही सर्वोपरि है।
— PMO India (@PMOIndia) July 10, 2022
इस महान संत परंपरा को, सन्यस्थ परंपरा को स्वामी विवेकानंद जी ने आधुनिक रूप में ढाला।
स्वामी आत्मस्थानानन्द जी ने भी सन्यास के इस स्वरूप को जीवन में जिया, और चरितार्थ किया: PM @narendramodi
सैकड़ों साल पहले आदि शंकराचार्य हों या आधुनिक काल में स्वामी विवेकानंद, हमारी संत परंपरा हमेशा ‘एक भारत, श्रेष्ठ भारत’ का उद्घोष करती रही है।
— PMO India (@PMOIndia) July 10, 2022
रामकृष्ण मिशन की तो स्थापना ‘एक भारत, श्रेष्ठ भारत’ के विचार से जुड़ी हुई है: PM @narendramodi
आप देश के किसी भी हिस्से में जाइए, आपको ऐसा शायद ही कोई क्षेत्र मिलेगा जहां विवेकानंद जी गए न हों, या उनका प्रभाव न हो।
— PMO India (@PMOIndia) July 10, 2022
उनकी यात्राओं ने गुलामी के उस दौर में देश को उसकी पुरातन राष्ट्रीय चेतना का अहसास करवाया, उसमें नया आत्मविश्वास फूंका: PM @narendramodi
स्वामी रामकृष्ण परमहंस, एक ऐसे संत थे जिन्होंने माँ काली का स्पष्ट साक्षात्कार किया था, जिन्होंने माँ काली के चरणों में अपना सर्वस्व समर्पित कर दिया था।
— PMO India (@PMOIndia) July 10, 2022
वो कहते थे- ये सम्पूर्ण जगत, ये चर-अचर, सब कुछ माँ की चेतना से व्याप्त है।
यही चेतना बंगाल की काली पूजा में दिखती है: PM
हमारे संतों ने हमें दिखाया है कि जब हमारे विचारों में व्यापकता होती है, तो अपने प्रयासों में हम कभी अकेले नहीं पड़ते!
— PMO India (@PMOIndia) July 10, 2022
आप भारत वर्ष की धरती पर ऐसे कितने ही संतों की जीवन यात्रा देखेंगे जिन्होंने शून्य संसाधनों के साथ शिखर जैसे संकल्पों को पूरा किया: PM @narendramodi
माँ काली का वो असीमित-असीम आशीर्वाद हमेशा भारत के साथ है।
— PMO India (@PMOIndia) July 10, 2022
भारत इसी आध्यात्मिक ऊर्जा को लेकर आज विश्व कल्याण की भावना से आगे बढ़ रहा है: PM @narendramodi