Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர், டிஜிட்டல் இந்தியா வாரம் 2022 –ஐ காந்தி நகரில் தொடங்கி வைத்தார்

பிரதமர், டிஜிட்டல் இந்தியா வாரம் 2022 –ஐ காந்தி நகரில் தொடங்கி வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-ஐ காந்தி நகரில் இன்று தொடங்கி வைத்தார். புதிய இந்தியாவுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் இது நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு டிஜிட்டல் முன்னெடுப்புகளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா இயக்கம், பெரிய அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

நான்காவது தொழிற்புரட்சியில் உலகிற்கு இந்தியா வழிகாட்டுவதாக பெருமையுடன் நாம் கூறமுடியும் என்று தெரிவித்தார். இதில் குஜராத் மாநிலம் முன்னணியில் உள்ளதாக பிரதமர் பாராட்டினார்.

பிறப்பு சான்றிதழ் பெறுவது, ரசீது தொகை செலுத்துதல், நியாயவிலைக் கடை,  மாணவர் சேர்க்கை, தேர்வு முடிவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை காகிதத்தின் மூலம் மேற்கொள்வதிலிருந்து விடுபட்டு ஆன் லைன் மூலம் மேற்கொள்வதற்கு தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். தற்போது இந்த சேவைகள் சாதாரண மக்களும் மிகவும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்  மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அவர் கூறினார். ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை மூலம் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு  இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய சிறந்த கொவிட் தடுப்பூசி இயக்கத்தை நாம் நடத்தி வருவதாக அவர் கூறினார். கோவின் இணையதளம் மூலம் 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அடுத்த 3-4 ஆண்டுகளில் 300  பில்லியன் டாலர் மதிப்பிற்குமேல் மின்னணு  பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்தியா இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839175

***************