பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புத் துறைகளில் மத்திய அறிவியல்- தொழில்நுட்பத்துறை, சிங்கப்பூர் வர்த்தக – தொழில் துறையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 2022-ல் கையெழுத்தானது.
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், மனிதவள பயிற்சி, ஒத்துழைப்புகள் மூலம் ஐ.பி. உற்பத்தி மேற்கொள்ள வழிவகுக்கும் நடைமுறையை வழங்குவதோடு, இருநாடுகளிலும் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு திறனை உருவாக்க உதவும்.
உள்ளிட்ட ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றில் முன்னேற்றத்தை விரைவுபடுத்தக் கூடிய பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இந்த ஒப்பந்தத்தின்படி முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837900
***************