Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

15-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2022 இல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் துவக்க உரை

15-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2022 இல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் துவக்க உரை


மாண்புமிகு அதிபர் திரு ஜி அவர்களே,

மாண்புமிகு அதிபர் திரு ரமஃபோசா அவர்களே,

மாண்புமிகு அதிபர் திரு போல்சோனாரோ அவர்களே,

மாண்புமிகு அதிபர் திரு புடின் அவர்களே,

 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரிக்ஸ் அமைப்பு நாடுகளில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சிகளுக்காக முதலில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். உங்கள் குழுக்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பெருமக்களே,

கொவிட் பெருந்தொற்றின் சவால்களுக்கு இடையே, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக காணொலி வாயிலாக இன்று நாம் சந்திக்கிறோம். 

சர்வதேச அளவில் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ள போதும், அதன் தாக்கங்கள் உலகப் பொருளாதாரத்தில் இன்றும் காணப்படுகின்றன.

 

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாகிய நாம், உலகப் பொருளாதாரத்தின் ஆளுகையைப் பற்றி ஒரே மாதிரியான பார்வையைக் கொண்டுள்ளோம்.

எனவே கொவிட் தொற்றுக்குப் பிந்தைய சர்வதேச மீட்சிக்கு நமது பரஸ்பர ஒத்துழைப்பு, ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கலாம்.

இந்த அமைப்பின் செயல்திறன் அதிகரிக்கும் வகையில், ஆண்டுவாக்கில் பிரிக்ஸ்-இல் ஏராளமான நிறுவன சீர்திருத்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.

நமது புதிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சிகரமான விஷயம்.

நமது பரஸ்பர ஒத்துழைப்பினால் நம் மக்கள் நேரடியாக பயனடையும் துறைகள் ஏராளமாக உள்ளன.

உதாரணமாக, தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின்  துவக்கம், சுங்கத்துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, பகிரப்பட்ட செயற்கைக்கோள் குழுக்களை நிறுவுதல், மருந்துப் பொருட்களின் பரஸ்பர அங்கீகாரம் உள்ளிட்டவை.

இத்தகைய நடைமுறை நடவடிக்கைகள், பிரிக்ஸ் அமைப்பை ஒரு தனித்துவமான சர்வதேச அமைப்பாக மாற்றுகின்றன. வெறும் பேச்சுவார்த்தையில் மட்டும் இது கவனம் செலுத்துவதில்லை.

பிரிக்ஸ் இளைஞர்கள் உச்சிமாநாடுகள், பிரிக்ஸ் விளையாட்டுகள் மற்றும் நமது நிறுவனங்களுக்கு இடையேயான பரிமாற்றங்களின் அதிகரிப்பு முதலியவை மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்தியுள்ளன.

நமது பிரிக்ஸ் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை இன்றைய கூட்டம் முன்வைக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**************

 (Release ID: 1836583)