2016-17 ஆம் நிதியாண்டில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் கூடுதல் நிதி ஆதாரமாக (EBR) மொத்தம் ரூ.31,3oo கோடி நிதி திரட்டுவதற்கு பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ரூ. 16,300 கோடி முதல், வட்டியாக அனுமதிக்கப்படுகிறது.
இந்த ரூ. 31,300 கோடி கூடுதல் நிதி ஆதாரத்தில் மின் நிதிக்கழகம் (PFC), இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA), உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் (IWAI) மற்றும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) ஆகியவற்றுக்கு மத்திய அரசு நிதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ரூ.16,300 கோடியைத் திரட்டுவதற்காக PFC, IREDA, IWAIமற்றும் NABARDஆகியவற்றுக்கு அந்தந்த அமைச்சகங்கள், துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மூலமாக மத்திய அரசு நிதி ஒதுக்கப்படும்.
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துணை புரியும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் வருவாய் மூலதனத்தைப் பெருக்குவதற்காக இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னணி:
ஒரு நாட்டின் வளர்ச்சி சீராக இருப்பதை மதிப்பீடு செய்தவற்கு, அதன் உள் கட்டமைப்புக்கான செலவு ஒரு முக்கிய காரணிகளில் ஒன்றாகும். மொத்த செலவில் மூலதனச் செலவு எத்தனை விகிதம் உள்ளதோ அதுதான் அதற்கான அளவுகோல் ஆகும். இந்த அணுகு முறையின் அடிப்படையில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான செலவுக்காக NHAI, PFC, REC, IREDA, NABARD மற்றும் தேசிய நீர்வழி ஆணையம் ஆகியவை கடன் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ. 31,300 கோடி நிதியைத் திரட்ட அனுமதி அளிக்கிறது என்ற அறிவிப்பை 2016-17 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு வெளியிட்டது.