வணக்கம்!
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல்; இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எனது மூத்த சகாவுமான திரு சி ஆர் பாட்டில், இங்குள்ள குஜராத் அரசின் இதர அமைச்சர்களே, எம்எல்ஏக்கள, நிராலி நினைவு மருத்துவ அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான திரு ஏ எம் நாயக் அவர்களே, அறங்காவலர் திரு பாய் ஜிக்னேஷ் நாயக் அவர்களே, இங்குள்ள அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! இன்று நீங்கள் முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் குஜராத்தியிலும் பேசக்கேட்டீர்கள். இந்தியை விட்டுவிடக் கூடாது.எனவே,இப்போது இந்தியில் பேச அனுமதியுங்கள்.
நேற்று அனில் பாயின் பிறந்தநாள் என்றும், ஒருவருக்கு 80 வயதாகும் போது, அதுவே சஹஸ்ர சந்திரதரிசனம் என்றும் எனக்குச் சொல்லப்பட்டது .என் தரப்பிலிருந்து அனில் பாய்க்கு மிகவும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நலம் பெற வாழ்த்துகிறேன்.
ஒட்டுமொத்த தெற்கு குஜராத் மக்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குவது தொடர்பான பல்வேறு திட்டங்கள் இன்று நவ்சாரியில் தொடங்கப்பட்டுள்ளன. சுகாதாரம் தொடர்பான நவீன கட்டமைப்புத் துறையிலும் இங்குள்ள சகோதர சகோதரிகளுக்கு இன்று புதிய வசதிகள் கிடைத்துள்ளன. சிறிது நேரத்திற்கு முன், நான் அருகில் ஒரு நிகழ்வில் பங்கேற்றேன். அங்கு மருத்துவக் கல்லூரிக்கு ‘பூமி பூஜை’ நடைபெற்றது, இப்போது நவீன சுகாதார கவனிப்பு வளாகத்தையும் பன்னோக்கு மருத்துவமனையையும் திறந்து வைக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன் இங்கு புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பையும் நான் பெற்றேன். திரு. ஏ.எம். நாயக் அவர்களுக்கும், நீரலி அறக்கட்டளை மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! அகால மரணமடைந்த அப்பாவி சிறுமி நீரலிக்கு உணர்வுபூர்வமான ஓர் அஞ்சலியாக இந்தத் திட்டத்தை நான் பார்க்கிறேன்.
ஏ.எம்.நாயக் அவர்களும் அவரது குடும்பமும் எதிர்கொண்ட இன்னல்களைப்போல் எந்தக் குடும்பமும் எதிர்கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஒரு வகையில், அனில் பாய் தனது தந்தையின் கடனையும், தனது கிராமத்தின் மற்றும் தனது குழந்தையின் கடனையும் திருப்பித் தந்துள்ளார். இந்த நவீன மருத்துவமனையின் மூலம் நவ்சாரி உள்ளிட்ட அனைத்து சுற்றுவட்டார மாவட்ட மக்களும் மிகுந்த பயன் பெறுவார்கள்.
நண்பர்களே,
நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சுகாதார சேவைகளை எடுத்துச் செல்வதற்காக நாங்கள் மேற்கொண்ட பிரச்சாரங்களின் அனுபவங்கள், இப்போது நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் காலகட்டத்தில் , ‘ஆரோக்கிய குஜராத், உஜ்வல் குஜராத்’ என்ற திட்டத்திற்கான வரைபடத்தை நாங்கள் தயாரித்தோம். மா யோஜனா என்று சுருக்கமாக அறியப்பட்ட முக்கியமந்திரி அம்ருதம் யோஜனா, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ரூ. 2 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதியை வழங்கியது, அதன் பயனாக இருந்தது.
அகமதாபாதில் உள்ள சிறுநீரக நிறுவனம் நவீனமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்படுகிறது. விரைவில் படுக்கைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். இன்று குஜராத்தில் உள்ள பல டயாலிசிஸ் மையங்கள் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகே டயாலிசிஸ் வசதிகளை வழங்கி வருகின்றன.
நாடு முழுவதும் டயாலிசிஸ் செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இயக்கங்களை மத்திய அரசு நடத்திவருகிறது, மேலும் அத்தகைய நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்ய முயற்சிசெய் கிறது. முன்பை விட இந்த இயக்கம் மிக வேகமாக நடந்து வருகிறது. இவ்வகையில் இன்று சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் மையங்கள் கிடைத்துள்ளன.
இந்த உறுதியுடன், அது சுகாதாரமாக இருந்தாலும், கல்வியாக இருந்தாலும், உள்கட்டமைப்பாக இருந்தாலும், இந்தியாவை நவீனமயமாக்குவதை நோக்கி தொடர்ந்து நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி” என்பது இந்த முயற்சியில், ஒரு முக்கியமான அம்சமாகும் . மக்களின் பங்கேற்பு அதிகரிக்கும் போது, நாட்டின் திறனும்கூட வேகமாக அதிகரித்து, பயன்கள் விரைவாகப் பெறப்படும் . உண்மையில், நாம் இன்னும் சிறந்த பயன்களைப் பெறுகிறோம்.
அரசு -தனியார் பங்களிப்பு மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு தனிநபரையும் இணைக்கும் ‘அனைவரின் முயற்சி” என்ற தீர்மானத்திற்கு அனில் பாய் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நல் வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
***************
Speaking at a public function in Navsari. https://t.co/U3PJkVWlpZ
— Narendra Modi (@narendramodi) June 10, 2022
बीते 8 साल के दौरान देश के हेल्थ सेक्टर को बेहतर बनाने के लिए हमने एक हॉलिस्टिक अप्रोच पर बल दिया है।
— PMO India (@PMOIndia) June 10, 2022
हमने इलाज की सुविधाओं को आधुनिक बनाने का प्रयास तो किया है, बेहतर पोषण, स्वच्छ जीवन शैली, preventive health के साथ जुड़े हुए behavioural विषयों पर भी जोर दिया है: PM
बीते 20 सालों में गुजरात के हेल्थ सेक्टर ने कई नए मुकाम हासिल किए हैं।
— PMO India (@PMOIndia) June 10, 2022
इन 20 वर्षों में गुजरात में शहरों से लेकर ग्रामीण इलाकों तक, हेल्थ इनफ्रास्ट्रक्चर के लिए अभूतपूर्व काम हुआ है, हर स्तर पर काम हुआ है।
ग्रामीण इलाकों में हजारों हेल्थ सेंटर्स बनाए गए: PM @narendramodi
गुजरात में अपने सेवाकाल के दौरान हमारी सरकार ने बच्चों और महिलाओं के स्वास्थ्य और पोषण को सर्वोच्च प्राथमिकता दी।
— PMO India (@PMOIndia) June 10, 2022
चिरंजीवी योजना के तहत पब्लिक-प्राइवेट भागीदारी सुनिश्चित करके, संस्थागत डिलिवरी को हमने एक व्यापक विस्तार दिया: PM @narendramodi
बीते सालों में गुजरात में डॉक्टर और पैरामेडिक्स की पढ़ाई और ट्रेनिंग की सुविधाएं भी बहुत अधिक बढ़ी हैं।
— PMO India (@PMOIndia) June 10, 2022
राजकोट में एम्स जैसा बड़ा संस्थान बन रहा है।
मेडिकल कॉलेजों की संख्या आज 30 से अधिक हो चुकी है: PM @narendramodi