Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகத் ஜரீனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ள நிகத் ஜரீனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மனீஷா மௌன், பர்வீன் ஹுண்டா ஆகியோருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் செய்தியில், “ இந்திய மகளிர்  குத்துச்சண்டை வீரர்கள் நம்மை பெருமையடைய செய்துள்ளனர். நிகத் ஜரீன் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அபார சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மானீஷா மௌன், பர்வீன் ஹுண்டாவுக்கும் எனது வாழ்த்துகள்”

***************