சர்தார்தாம் ஏற்பாடு செய்திருந்த உலகாளவிய பட்டிடார் வணிக உச்சி மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல், மத்திய அமைச்சர்கள், தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சூரத் நகரம் அதிவேகமாக வளர்ந்து வரும் உலக நகரங்களில் ஒன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். சர்தார் படேலின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த பிரதமர், இன்றைய இந்தியா வளமாக இருக்கிறது என்றார். “நாம் வெறுமனே நமது தன்னம்பிக்கையையும் நமது தற்சார்பு இந்தியா உணர்வையும் வலுப்படுத்த வேண்டியிருக்கும். வளர்ச்சியில் அனைவரின் பங்கேற்பு இருக்கும் போது, ஒவ்வொரின் முயற்சியும், ஈடுபடுத்தப்படும் போது மட்டுமே இந்த நம்பிக்கை வரும்”.
நாட்டில் தொழில்முனைவோர் உணர்வு அதிகரித்திருப்பது பற்றி கூறிய பிரதமர், அரசின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடு மூலமும், அதன் தொடர்ச்சியான முயற்சிகளாலும் நாட்டில் நல்லதொரு சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சாதாரண குடும்பங்களின் இளைஞர்களும் தொழில்முனைவோராகி தொழில்துறையில் கனவை நனவாக்கி பெருமிதம் கொள்ளமுடியும் என்றார். வணிகம் பற்றி ஒரு போதும் கனவு காணாதவர்களும் வணிகத்தில் ஈடுபடுவதற்கு முத்ரா திட்டம் போன்றவை பலத்தைத் தந்துள்ளது என்று பிரதமர் கூறினார். அதே போல் ஏற்கனவே அடையமுடியாததாக தோன்றியவை தொடங்கிடு இந்தியா என்பது புதிய கண்டுபிடிப்பு, திறன், யூனிகார்ன் கனவுகள் ஆகியவற்றை நனவாக்க உதவியுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை, பாரம்பரியமான துறைகளுக்கு புதிய சக்தியை தந்திருப்பதோடு புதிய துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் கூறினார். பெருந்தொற்று சவால்கள் இருந்த போதும், நாட்டின் எம்எஸ்எம்இ துறை வேகமாக முன்னேறியுள்ளது. பெருமளவிலான நிதியுதவியுடன் இந்தத் துறையில் லட்சக்கணக்கான வேலை பாதுகாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் துறை வேலைவாய்ப்பில் பல புதிய வழிகளை திறந்துள்ளது. முறைப்படியான வங்கி நடைமுறை நிதி ஆதாரம் வழங்குவதன் மூலம் வளர்ச்சியின் கதையை உருவாக்க தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டம் உள்ளது. இந்தத் திட்டம் அண்மையில் 2024 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு சிறு மற்றும் பெரிய வணிகமும், தேச வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறது. அனைவரின் முயற்சி என்ற உணர்வு அமிர்த காலத்தில் புதிய இந்தியாவின் பலமாக மாறுகிறது என்று பிரதமர் கூறினார். இந்த அம்சத்தை விரிவாக்க விவாதிக்கும் இந்த ஆண்டின் உச்சிமாநாடு குறித்து அவர், மகிழ்ச்சி தெரிவித்தார்.
பின்னர், குஜராத்தி மொழியில் உரையாற்றிய பிரதமர், தேச நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து பணியாற்ற அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்குமாறு அந்த சமூகத்தை கேட்டுக்கொண்டார். சிந்தனைகளை, உலகளாவிய நல்ல நடைமுறைகளைம் அரசின் கொள்கைகளை அவற்றின் பகுப்பாய்வுகளை ஆவணப்படுத்துவதையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். ஃபின்டெக், திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் போன்ற விஷயங்களில் அரசு மற்றும் கல்வி நிறுவன தலையீட்டிற்கு ஆலோசனை வழங்கவேண்டும். அதே போல் ஒட்டுமொத்த அமலாக்கம், அனைத்து நிலைகளிலும் பயனுள்ள குறுக்கீட்டிற்கான ஆலோசனைக்கு சிறந்த வழிகளை கண்டுபிடிப்பதற்கு தேசிய கல்விக் கொள்கையை பயன்படுத்த முடியும்.
வேளாண்மையை நவீனமாக்கும் வழிமுறைகளைக் கண்டறியுமாறும் வேளாண் துறையில் முதலீட்டை கொண்டுவருமாறும் இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் வலியுறுத்தினார். வேளாண்மை மற்றும் புதிய பயிர்களுக்கான புதிய வழிகளை தெரிவிப்பதற்கு குஜராத்தில் நில ஆய்வு செய்ய குழுக்களை உருவாக்குமாறு அவர் யோசனை தெரிவித்தார். சில பத்தாண்டுகளுக்கு முன் குஜராத்தில் பால்பண்ணை இயக்கம் உருவாக்கப்பட்டதை உதாரணமாக எடுத்துக் காட்டிய அவர், இது குஜராத் விவசாயிகளின் பொருளாதார நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியதையும் சுட்டிக்காட்டினார். வேளாண் அடிப்படையிலான தொழில்களை ஊக்கப்படுத்தும் வழிகளை கண்டறிவது அவசியம் என்று அவர் கூறினார். இத்தகைய முயற்சிகள் சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைக்க உதவும் என்று தெரிவித்த அவர், உணவுப்பதப்படுத்தும் தொழில்துறை வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு பல வாய்ப்புகள் கிடைப்பதால் அவற்றை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு பிரதிநிதிகளை அவர் கேட்டுக் கொண்டார். இயற்கை வேளாண்மை துறையில், பணியாற்றுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார். அண்மையில் தொடங்கப்பட்ட அமிர்த நீர்நிலைகள் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யுமாறும் அவர் கோரினார். அண்மையில் நடைபெற்ற ஆயுர்வேத உச்சிமாநாடு பற்றி பேசிய பிரதமர், மூலிகை மற்றும் ஆயுஷ் துறையில், ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகளை கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.
பட்டிடார் சமூகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 2026 இயக்கத்தின் கீழ், சர்தார்தாம் இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் முதல் இரண்டு உச்சிமாநாடுகள் காந்திநகரில் நடைபெற்றன. தற்போதைய மாநாடு சூரத்தில் நடைபெற்றது.
இந்த உச்சிமாநாட்டின் மையப்பொருள் தற்சார்பு சமூகத்திலிருந்து, தற்சார்பு குஜராத் மற்றும் இந்தியா என்பதாகும். இந்த சமூகத்தில் உள்ள சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின் நோக்கமாகும். இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க புதிய தொழில் முனைவோரை உருவாக்கி ஆதரவு அளிப்பதும், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவி செய்வதும் இதன் மற்றொரு நோக்கமாகும். ஏப்ரல் 29 முதல் மே 1 வரை , நடைபெறவுள்ள இந்த மூன்று நாள் உச்சிமாநாடு அரசின் தொழில் கொள்கை. எம்எஸ்எம்இ-க்கள் புதிய தொழில்கள், புதிய கண்டுபிடிப்பு போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
**************
Speaking at the Global Patidar Business Summit. https://t.co/S2KDxpYTSJ
— Narendra Modi (@narendramodi) April 29, 2022
आज भारत के पास इतना कुछ है।
— PMO India (@PMOIndia) April 29, 2022
हमें बस अपने आत्मविश्वास को, आत्मनिर्भरता के अपने जज्बे को मज़बूत करना है।
ये आत्मविश्वास तभी आएगा जब विकास में सबकी भागीदारी होगा, सबका प्रयास लगेगा: PM @narendramodi
अपनी नीतियों, अपने एक्शन के माध्यम से सरकार का ये निरंतर प्रयास है कि देश में ऐसा माहौल बने कि सामान्य से सामान्य परिवार का युवा भी entrepreneur बने, उसके लिए के सपने देखे, entrepreneurship पर गर्व करे: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 29, 2022
मुद्रा योजना आज देश के उन लोगों को भी अपना बिजनेस करने का हौसला दे रही है, जो कभी इसके बारे में सोचते भी नहीं थे।
— PMO India (@PMOIndia) April 29, 2022
स्टार्ट अप इंडिया से वो इनोवेशन, वो टैलेंट भी आज यूनिकॉर्न के सपने साकार होते देख रहा है, जिसको कभी रास्ता नहीं दिखता था: PM @narendramodi
Production Linked incentive यानि PLI योजना ने पुराने सेक्टरों में तो मेक इन इंडिया का उत्साह तो भरा ही है, सेमीकंडक्टर जैसे नए सेक्टर्स के विकास की संभावनाएं भी बनी हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 29, 2022