Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காந்திநகரில் பள்ளிகளுக்கான வித்யா சமிக்ஷா மையத்திற்கு பிரதமர் விஜயம்

காந்திநகரில் பள்ளிகளுக்கான வித்யா சமிக்ஷா மையத்திற்கு பிரதமர் விஜயம்


காந்திநகரில் பள்ளிகளுக்கான வித்யா சமிக்ஷா மையத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி விஜயம் செய்தார். மையத்தின் பல்வேறு செயல்பாடுகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. பிரதமருக்கு ஒலி-ஒளி காட்சியும் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மையத்துடன் தொடர்புடையவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆசிரியர்களிடம் பிரதமர் விசாரித்தார். திக்ஷா தளத்தை பயன்படுத்துவது குறித்து மாணவர்களிடம் பிரதமர் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் நன்றாக விளையாடுவதுடன் சாப்பிடவும் வேண்டுமென்று அவர் அறிவுறுத்தினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தாம் கனடா சென்றது குறித்த அனுபவத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டார். அங்கு ஒரு அறிவியல் அருங்காட்சியகத்திற்கு சென்றதை அவர் விவரித்தார்.

குஜராத் மாநிலம் எப்போதும் புதிய முறைகளை கையாள்வதை வழக்கமாக கொண்டுள்ளது என்றும், பின்னர் அது நாடு முழுவதும் பின்பற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். குஜராத்தில் கடைப்பிடிக்கப்படும் முறைகள் குறித்து மற்ற மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருவதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. புதிய முறையின் அடிப்படையில் ஆரோக்கியமான போட்டிக்கான சூழலைப் பராமரிக்க வேண்டுமென்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இந்த மையம் ஆண்டுக்கு 500 கோடிக்கும் மேற்பட்ட தரவுகளை சேகரித்து அவற்றை பெரிய தரவு பகுப்பு நிபுணர்கள் மூலம் பகுப்பாய்வு செய்து வருகிறது. மாணவர்களுக்கு ஒட்டு மொத்த கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தினவரி ஆன்லைன் வருகைப்பதிவேட்டை கண்டறியவும் மையம் உதவுகிறது.

 

***************

(Release ID: 1817876)