பூஜ்ஜில் அமைந்துள்ள கே.கே.படேல் உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையை 2022 ஏப்ரல் 15-ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பூஜ்ஜில் உள்ள ஸ்ரீ கச்சி லேவா படேல் சமாஜால் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
கச்சில் அமைந்துள்ள முதல் தொண்டு நிறுவன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இதுவேயாகும். 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான இதில், இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி (கேத்லாப்), கார்டியோடோராசிக் சர்ஜரி, ரேடியேஷன் ஆன்காலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, சர்ஜிகல் ஆன்காலஜி, நெப்ராலஜி, யூராலஜி, நியூக்ளியர் மெடிசின், நியூரோ சர்ஜரி, மூட்டு மாற்று மற்றும் ஆய்வகம், கதிரியக்கவியல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேவைகளை இப்பகுதி மக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் குறைந்த கட்டணத்தில் இங்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816545
—–