Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்வ நவமியையொட்டி ஸ்ரீமத்வாச்சார்யாவுக்கு பிரதமர் தமது வணக்கங்களை தெரிவித்துள்ளார்


மத்வ நவமியையொட்டி ஸ்ரீமத்வாச்சார்யாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வணக்கங்களை தெரிவித்துள்ளார். 2017 பிப்ரவரியில், ஜகத்குரு மத்வாச்சாரியாரின் 7-வது நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது தாம் ஆற்றிய உரையின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

 பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், “மத்வ நவமி புனித நாளில் நான் எனது மதிப்பிற்குரிய வணக்கங்களை ஸ்ரீமத்வாச்சாரியாவுக்கு தெரிவிக்கிறேன். ஆன்மிகம் மற்றும் சமூக மேம்பாடு குறித்த அவரது உன்னதமான போதனைகள் தலைமுறைகளையும் ஊக்குவிக்கக் கூடியதாகும். ஸ்ரீமத்வாச்சார்யா குறித்த உரையை நான் அளித்துள்ளேன்”.

***************