இஸ்ரேலின் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். நமது நட்புறவில் இன்றைய தினம் சிறப்பான நாளாகும். 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நமக்கிடையே முழுமையான தூதரக உறவு ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கியது.
இந்த அத்தியாயம் புதியது என்ற போதும், நமது நாடுகளின் வரலாறு மிகவும் பழமையானது. பல நூற்றாண்டுகளாக நமது மக்களுக்கிடையேயான நட்புறவு மிகவும் நெருக்கமானது.
யூத சமூகம் 400 ஆண்டு காலம் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இந்திய சமூகத்தில் வாழ்ந்து இணக்கத்தோடு வளர்ந்து வருகிறது. இதுதான் இந்தியாவின் பண்பாகும். நமது வளர்ச்சிப் பயணத்தில் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை இந்தியா கொண்டாடும் நிலையில், இஸ்ரேல் அதன் சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை அடுத்த ஆண்டு கொண்டாடவிருக்கிறது. இந்தச் சூழலில் இரு நாடுகளும் தங்களின் தூதரக உறவுகளின் 30-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்றன. இது பரஸ்பர ஒத்துழைப்புக்கான புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கான சிறந்த வாய்ப்பாகும். 30-வது ஆண்டின் முக்கியமான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்தியா – இஸ்ரேல் நட்புறவில் வரும் 10 ஆண்டுகளில் பரஸ்பர ஒத்துழைப்பு புதிய சாதனைகள் படைப்பது தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
***
My message on the 30th anniversary of India-Israel full diplomatic relations. https://t.co/86aRvTYCjQ
— Narendra Modi (@narendramodi) January 29, 2022