Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவரை பிரதமர் நினைவுகூர்ந்தார்


மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று, தியாகிகள் தினத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். நம்நாட்டை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து பெரும் தியாகிகளுக்கும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ மகாத்மாவின் புண்ணிய திதியில் அவரை நினைவுகூர்வோம். அவரது உன்னதமான லட்சியங்களை மேலும் பரப்புவது நம் அனைவரின் கூட்டு முயற்சியாகும்.

தியாகிகள் தினமான இன்று, நம் நாட்டை தீரத்துடன் பாதுகாத்த அனைத்து பெரும் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம். அவர்களது சேவையும், வீரமும் எப்போதும் நினைவில் கொள்ளப்படும்’’

 

****