Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரிபுராவின் 50-வது மாநில தின விழாவில் பிரதமரின் உரை

திரிபுராவின் 50-வது மாநில தின விழாவில் பிரதமரின் உரை


திரிபுராவின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்த மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார். மாணிக்ய வம்சத்தின் காலத்திலிருந்து மாநிலத்தின் கண்ணியம் மற்றும் பங்களிப்பை அவர் புகழ்ந்துரைத்தார். மாநில மக்களின் ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சிகளை அவர் பாராட்டினார். திரிபுரா மாநிலத்தின் 50-வது மாநில தின விழாவில் கலந்து கொண்டு அவர் இன்று பேசினார்.

மூன்று வருட அர்த்தமுள்ள வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர்இரட்டை எஞ்சின் அரசின் இடைவிடாத முயற்சியின் கீழ் வாய்ப்புகளின் பூமியாக திரிபுரா மாறி வருகிறது என்றார். வளர்ச்சி அளவுருக்கள் பலவற்றில் மாநிலத்தின் சிறப்பான செயல்திறனை எடுத்துரைத்த பிரதமர்இணைப்பு உள்கட்டமைப்பின் கட்டுமானத்தின் மூலம்வர்த்தக வழித்தடத்தின் மையமாக மாநிலம் வேகமாக மாறி வருகிறது என்றார். இன்று சாலைரயில்விமான மற்றும் நீர் வழிகள்  திரிபுராவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. இரட்டை எஞ்சின் அரசு திரிபுராவின் நீண்டகாலக்  கோரிக்கையை நிறைவேற்றி வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் கடல் துறைமுகத்துடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டில் அகௌரா ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி மூலம் வங்கதேசத்தில் இருந்து முதல் சரக்குகளை மாநிலம் பெற்றது. மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தின் சமீபத்திய விரிவாக்கத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். 

ஏழைகளுக்கு நல்ல வீடுகள் வழங்குவது மற்றும் வீட்டுக் கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக மாநிலத்தில் சிறப்பான பணிகள் குறித்து பிரதமர் பேசினார். இந்த கலங்கரை விளக்கத்  திட்டங்கள் ஆறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றனஅவற்றில் திரிபுராவும் ஒன்று. கடந்த மூன்று ஆண்டுகளின் பணிகள் ஒரு ஆரம்பம் தான் என்றும்திரிபுராவின் உண்மையான திறன் இன்னும் உணரப்படவில்லை என்றும் அவர் கூறினார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை முதல் உள்கட்டமைப்பு மேம்பாடு வரையிலான நடவடிக்கைகள்பல தசாப்தங்களுக்கு மாநிலத்தை தயார்படுத்தும் என்று அவர் கூறினார். அனைத்து கிராமங்களிலும் அரசு நலத் திட்டப்  பயன்கள்  மற்றும் வசதிகளை முழு அளவில்  செய்வது போன்ற நடவடிக்கைகள் திரிபுரா மக்களின் வாழ்க்கையை எளிதாகவும் சிறப்பாகவும் மாற்றும்என்றார் அவர்.

இந்தியா 100-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் போதுதிரிபுரா மாநில அந்தஸ்து பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும் என்று பிரதமர் கூறினார். “புதிய தீர்மானங்கள் மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான சிறந்த காலம் இது” என்று பிரதமர் மேலும் கூறினார்.

****