Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவப்படும்: பிரதமர்


இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை கட்டி முடிக்கப்படும் வரை, அந்த இடத்தில் அவரது முப்பரிமாணப் படிப்பைச் (ஹாலோகிராம்) சிலையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி  அவரது பிறந்தநாளில் பிரதமர் திறந்து வைப்பார்.

ட்வீட்டர்  தொடரில் பிரதமர் கூறியதாவது;

ஒட்டுமொத்த நாடே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ள தருணத்தில், இந்திய கேட் பகுதியில் அவரது முழு உருவக்  கருங்கல் சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு இந்தியா  பட்டுள்ள நன்றிக்கடன் சின்னமாக இச்சிலை அமையும்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை தயாராகும் வரை, அவரது ஹோலோகிராம் சிலை அதே இடத்தில் இருக்கும். நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23 அன்று, ஹோலோகிராம் சிலையை நான் திறந்து வைக்கவுள்ளேன்.

****