வரி ஏய்ப்பு, ரவுண்ட் ட்ரிப்பிங், முதலீட்டு சுரண்டல்/லாப நகர்வு ஆகியவற்றுக்கு எதிரான தனது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்தது இந்தியா. பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா சைப்ரஸ் இடையே இரட்டை வரிவிதிப்பை தவிர்க்கவும், நிதி ஏய்ப்பை தடுக்கவும் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் மற்றும் நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மொரீஷியசுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் சமீபத்தில் ஏற்படுத்திய திருத்தங்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொரீஷியசை பொறுத்தவரை சைப்ரசுடனான ஒப்பந்தத்தில் முதலீட்டு லாபங்களைப் பெறுவதற்கு குடிசார் வரிவிதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் மத்திய அமைச்சரவையில் ஏற்கப்பட்டுள்ள சூழலில் முதலீட்டு லாபங்களுக்கான வரி. இரட்டைவரி தவிர்ப்பு போக, சைப்ரசில் குடியுரிமை உள்ளவர்களுக்கு விதிக்கப்படும். எளிமையாக சொல்வதானால், இந்தியாவில் ஈட்டப்பட்ட லாபத்திற்கு இந்தியா வரி விதிக்க முடியும். முந்தைய உடன்படிக்கையில் இருந்த குடிசார் வரிவிதிப்பு நெறிமுறைகளால், ஒரு நாட்டில் இருந்து வரும் முதலீடுகளை செயற்கையாக திசைதிருப்புவது, பொருளாதார திரிபுகள் செய்வது என வரி ஏய்ப்பு செய்வதற்காக ஏராளமான முறைகேடுகள் நடந்தது. மொரிஷியஸ் பொறுத்தவரை இந்த திருத்தம் இத்தகைய முறைகேடுகளை தவிர்க்க உதவும். இதே போன்ற திருத்தங்களை மேற்கொள்ள சிங்கப்பூருடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.