Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை டிசம்பர் 4 அன்று பிரதமர் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்


டேராடூனுக்குப்  பயணம் செய்யவிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை 2021 டிசம்பர் 4 அன்று பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்இந்த மண்டலத்தில் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் பயணத்தை மாற்றுவதற்கும், சுற்றுலாவை அதிகரிப்பதற்கும்  சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள்  பற்றியதாக இந்த பயணத்தின் நோக்கம் இருக்கும். ஒருகாலத்தில் மிகவும் தொலைதூரத்தில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு எளிதாகப் போக்குவரத்துத் தொடர்பை அதிகப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலானதாக இது இருக்கும்.

பதினோரு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்ரூ.8,300 கோடி செலவில் கட்டப்படவுள்ள தில்லி டேராடூன் (கிழக்கத்திய புறப்பகுதி விரைவுச்சாலை சந்திப்பிலிருந்து டேராடூன் வரை) பொருளாதார வழித்தடமும் இதில் அடங்கும்தில்லியிலிருந்து டேராடூனுக்கு 6 மணிநேர பயண நேரத்தை இது குறிப்பிடத்தக்க வகையில், 2.5 மணி நேரமாகக் குறைக்கும்

இந்தப் பாதை ஹரித்துவார், முஸாபர்நகர், ஷாம்லி, யமுநகர், பாக்பட், மீரட், பாரௌட் ஆகிய ஏழு பெரிய இணைப்புச் சாலைகளைக் கொண்டிருக்கும்வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாத வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உயர்மட்ட பாதையாக (12 கிமீ) இது இருக்கும்தத் காளி கோயில், டேராடூன் அருகே 340 மீட்டர் நீள சுரங்கப்பாதை, வன விலங்குகள் மீதான தாக்கத்தைக் குறைக்கவும் உதவும்மேலும், வன விலங்குகள்வாகனங்கள் மோதுவதைத் தவிர்க்க கணேஷ்பூர் டேராடூன் பிரிவில் பல இடங்களில் விலங்குகள் கடக்கும் இடங்களை இந்தப் பாதை கொண்டிருக்கும்தில்லிடேராடூன் பொருளாதார வழித்தடத்தில் 500 மீட்டர் இடைவெளியில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளுக்கும், 400 க்கும் அதிகமான இடங்களில் தண்ணீர் தேக்கும் அமைப்புகளுக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது

ஹல்கோவா, சஹரான்பூர் முதல் பத்ராபாத் வரை, ஹரித்துவார் ஆகியவற்றை இணைக்கும் தில்லிடேராடூன் பொருளாதார வழித்தடத்தில் பசுமை நில இணைப்புத் திட்டம் ரூ.2,000 கோடி செலவில் கட்டமைக்கப்படும்இது தில்லியிலிருந்து ஹரித்துவார் வரை தடையில்லா போக்குவரத்தை வழங்குவதோடு பயண நேரத்தையும் குறைக்கும்மனோகர்பூரிலிருந்து  காங்கிரி வரையிலான ஹரித்துவார் சுற்றுவட்ட சாலைத் திட்டம் ரூ.1,600 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்இது ஹரித்துவார் நகரில் குறிப்பாக சுற்றுலா காலம் உச்சத்தில் இருக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து நிவாரணத்தை வழங்குவதோடு, குமாவோன் மண்டலத்துடனான போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும்

டேராடூன் பௌவன்டா சாஹேப் (இமாச்சலப் பிரதேசம்) சாலைத் திட்டம் ரூ.1,700 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்இந்த இரு இடங்களுக்கு இடையேயான  பயண நேரத்தை இது குறைப்பதோடு, தடையில்லா போக்குவரத்துத்  தொடர்பை வழங்கும்இது மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுலாவை அதிகரிக்கும்நசீமாபாத் கோட்வார் சாலை விரிவுபடுத்தும் திட்டம், பயணநேரத்தைக் குறைப்பதோடு லான்ஸ்டோனுக்கு போக்குவரத்துத் தொடர்பையும் மேம்படுத்தும்

லக்ஷம் ஜூலாவுக்கு அருகே கங்கை நதியின் குறுக்கே பாலம் ஒன்றும் கட்டப்படவுள்ளது.  1929-ல் கட்டப்பட்ட உலகறிந்த லக்ஷம் ஜூலா பாலத்தின் பாரம் தாங்கும் திறன் குறைந்ததன் காரணமாக இப்போது அது மூடப்பட்டுள்ளதுஇந்தப் பாலம்  கண்ணாடிப் பலகையின் மீது மக்கள் நடந்து செல்லும் வசதி கொண்டதாக இருப்பதோடு, இதன் மீது லேசான எடையுள்ள வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்படும்

குழந்தைகள்  பாதுகாப்பாகப் பயணம் செய்யும் வகையில், டேராடூனில்  அமையவிருக்கும் குழந்தைகளுக்கு உகந்த நகர் திட்டத்திற்கும், பிரதமர்  அடிக்கல் நாட்டவுள்ளார்டேராடூனில் ரூ.700 கோடிக்கும் அதிக செலவிலான குடிநீர் விநியோகம், சாலை, கழிவு நீர்  தொடர்பான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது

பொலிவுறு ஆன்மீக நகரங்கள் உருவாக்கம், சுற்றுலா தொடர்பான கட்டமைப்பு மேம்பாடு என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில் ஸ்ரீபத்ரிநாத் தாம், கங்கோத்ரி யமுனோத்ரி தாம் ஆகியவற்றின் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்படும்.  மேலும், ஹரித்துவாரில் ரூ.500 கோடிக்கும் அதிக செலவில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்படவுள்ளது

இந்த பிராந்தியத்தில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படும் பிரச்சனையைக் கையாண்டு பாதுகாப்பான பயணத்தின் மீது கவனம் செலுத்துவது உட்பட  7 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்இந்தத் திட்டங்களில் லம்பாகடில் (பத்ரிநாத் தாம் செல்லும் வழியில்) நிலச்சரிவைக் கட்டுப்படுத்தும் திட்டம், என் ஹெச்-58-ல் சகநிதார், ஸ்ரீநகர், தேவ்பிரயாக் ஆகிய இடங்களில் நிலச்சரிவை சரிசெய்யும் திட்டம் ஆகியவையும் அடங்கும்லம்பாகட்  நிலச்சரிவு கட்டுப்படுத்தும் திட்டம் என்பது  மண்சுவர் மற்றும் கல்சுவர் தடுப்புகளைக் கட்டுவதையும் உட்படுத்தியதாகும்இந்தத் திட்டம் அமையும் இடம் ராணுவ ரீதியில் மிக முக்கியமானதாகும்.  

சார்தாம் சாலை தொடர்பு திட்டத்தின்கீழ், தேவ் பிரயாக்கில் இருந்து ஸ்ரீகோட் வரையும் என் ஹெச்-58-ல் ப்ரம்பூரியிலிருந்து கொடியாலா வரையும் சாலை விரிவாக்கத் திட்டமும் தொடங்கி வைக்கப்படவுள்ளது

டேராடூனில் இமாலய கலாச்சார மையத்தோடு யமுனா நதிக்குக் குறுக்கே ரூ. 1,700 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்படவுள்ள 120 மெகாவாட் வியாசி புனல் மின் திட்டமும் தொடங்கி வைக்கப்படும். இந்த இமாலய கலாச்சார மையம் மாநில அளவிலான அருங்காட்சியகம், 800 இருக்கை கொண்ட  அரங்கம், நூலகம், கருத்தரங்க கூடம் இன்னபிறவற்றைக்  கொண்டிருக்கும்இது கலாச்சார நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற உதவுவதோடு, மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் போற்றுவதாகவும் இருக்கும்

டேராடூனில் நவீன வாசனை திரவியம் மற்றும் நறுமணப் பொருட்கள் பரிசோதனைக் கூடத்தையும் (நறுமண தாவரங்களுக்கான மையம்) பிரதமர் தொடங்கி வைப்பார்இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வு வாசனைப் பொருட்கள், சோப்புகள், கிருமிநாசினி, காற்று சுத்தப்படுத்திகள், ஊதுவத்திகள் உள்ளிட்ட பலவகையான பொருட்களுக்குப் பயன்படும் என்பது நிரூபிக்கப்படும்மேலும், இந்தப் பகுதியில் இதுதொடர்பான தொழிற்சாலைகள் அமைவதற்கும் வழிவகுக்கும்மேலும், அதிக விளைச்சல் தரும் பலவகையான நறுமணத் தாவரங்களை உருவாக்குவதிலும் இது கவனம் செலுத்தும்

**************

(Release ID: 1776722)