Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

82-வது அனைத்திந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் நவம்பர் 17 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்


82-வது அனைத்திந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் 2021 நவம்பர் 17 அன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

இந்திய சட்டமன்றங்களின் தலைமை அமைப்பான அனைத்திந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாடு 2021-ம் ஆண்டில் அதன் நூற்றாண்டை கொண்டாடுகிறது. அனைத்திந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாட்டின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக அதன் 82-வது பதிப்பு 2001 நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிம்லாவில் நடைபெறுகிறது.

மக்களவைத் தலைவர், ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

 ****