Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் மோடி இந்தோனேஷியாவின் மேன்மை தங்கிய அதிபர் திரு.ஜோகோ விடோடோவை சந்தித்தார்

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் மோடி இந்தோனேஷியாவின் மேன்மை தங்கிய அதிபர் திரு.ஜோகோ விடோடோவை சந்தித்தார்


இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கிடையே 2021 அக்டோபர் 31 அன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி இந்தோனேஷியாவின் மேன்மை தங்கிய அதிபர் திரு.ஜோகோ விடோடோவை சந்தித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக இந்தோனேஷியாவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். முத்தரப்பின் ஒரு பகுதியாக இந்தோனேஷியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்று அவரிடம் பிரதமர் உறுதி அளித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த இரு தலைவர்களும் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்திலும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டனர். இந்தியா – பசிபிக் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இரு தரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல், இரு நாடுகளுக்கு இடையே முதலீடு, மக்களோடு மக்கள் கலந்துறவாட வழிவகுத்தல் ஆகியவற்றுக்கும் இரு தலைவர்களும் உறுதி ஏற்றனர்.

பருவநிலை மாற்றத்தை முறியடிப்பது குறித்து, குறிப்பாக பருவநிலை மாற்றத்திற்கான நிதி வாக்குறுதிகளை அமலாக்குவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

***