Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி இன்று காணொளி கருத்தரங்கம் வாயிலாக ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த தருணத்தில் பேசிய பிரதம மந்திரி கடந்த 7 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் முயற்சிகள் இன்று ஒரு புதிய வளர்ச்சி கட்டத்தை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். ”இந்தியாவின் சுகாதார வசதிகளில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வரக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு இயக்கத்தை இன்று நாம் தொடங்கி வைக்கிறோம்”, என்று பிரதம மந்திரி மேலும் தெரிவித்தார்.

130 கோடி ஆதார் எண்கள், 118 கோடி மொபைல் சந்தாதாரர்கள், சுமார் 80 கோடி இணையப் பயன்பாட்டாளர்கள், சுமார் 43 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றுடன் கூடிய நம்முடைய மிகப்பெரும் உள்கட்டமைப்பு இணைப்பு வசதி போன்று உலகில் வேறெங்குமே இல்லை. சாதாரண இந்தியருக்கு விரைவாகவும் வெளிப்படையாகவும் ரேஷன் முதல் நிர்வாகம் வரை அனைத்தையும் இந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதியானது கொண்டு சேர்க்கிறது. “இன்று ஆளுகையில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்ற முறையானது நிகரில்லாததுஎனப் பிரதமர் தெரிவித்தார்.

ஆரோக்கிய சேது செயலியானது கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பெருமளவில் உதவி உள்ளது என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்இலவச தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இன்று வரை சுமார் 90 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்துதல் என்ற சாதனையை இந்தியா நிகழ்த்துவதில் கோவின் (Co-WIN) பங்கினை பிரதமர் பாராட்டினார்.

சுகாதாரத் துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் என்ற மையக்கருத்தினைத் தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் தொலைமருத்துவத்தின் விரிவாக்கம் நிகரில்லாமல் இருந்ததையும் பிரதமர் குறிப்பிட்டார்சஞ்ஜீவினி மூலம் சுமார் 125 கோடி தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் இதுவரையில் வழங்கப்பட்டு உள்ளன. நாட்டின் தொலைதூர பகுதிகளில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான குடிமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே நகரத்தின் மிகப்பெரும் மருத்துவமனையின் மருத்துவர்களோடு தினந்தோறும் ஆலோசனை பெற இந்த வசதி உதவுகிறது என்று கூறினார்.

ஆயுஷ்மான் பாரத்பிஎம்ஜெஏஒய் திட்டமானது ஏழைகளின் மிகப்பெரும் பிரச்சினையை தீர்ப்பதாக உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை பாதி அளவாகும். வறுமை என்ற மாயவட்டத்திற்குள் குடும்பங்களை தள்ளுவதில் நோய்கள் முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பதை பிரதம மந்திரி எடுத்துக்காட்டினார். குடும்பத்தில் இருக்கின்ற பெண்கள் தங்களது ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதால்  அவர்களே அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள்ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகள் சிலரிடம் தனிப்பட்ட முறையில் பேசிய போது திரு மோடி இந்த கருத்தை தெரிவித்தார்இந்த கலந்துரையாடல்களின் போது திட்டத்தின் பலன்களை அவர் நேரிடையாக கண்டுணர்ந்தார். ”இத்தகைய சுகாதார பராமரிப்பு தீர்வுகள் நாட்டின் நிகழ்காலத்திற்கும் மற்றும் எதிர்காலத்திற்கும் மிகப்பெரும் முதலீடாக உள்ளனஎன்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரத் தீர்வுகளை ஒன்றுடன் ஒன்று பரஸ்பரம் இணைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத்டிஜிட்டல் இயக்கம் உள்ளது என்று பிரதமர் கூறினார்இந்த இயக்கமானது மருத்துவமனைகளின் செயல்முறைகளை எளிமையாக்குவதோடு சௌகரியத்தையும் அதிகப்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடிமகனும் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டையைப் பெறுவார்கள். அவர்களது சுகாதார ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.

முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த மாதிரி முன்தடுப்பு சுகாதார பராமரிப்புக்கு முக்கியத்துவம் தருகிறது. மேலும் நோய்வாய்ப்பட்டால் எளிதில் செலவில்லாத அணுக முடிந்த சிகிச்சை கிடைப்பதையும் உறுதி செய்கிறது. சுகாதாரக் கல்வியில் நிகரில்லாத நிலையில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் விவாதித்தார்இந்தியாவில் 7-8 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையோடு ஒப்பிட இப்போது மிகப்பெரும் எண்ணிக்கையில் மருத்துவர்களும் துணை மருத்துவ பணியாளர்களும் உருவாக்கப்பட்டு வருகிறார்கள்எய்ம்ஸ் மருத்துவமனைகள் பல இடங்களில் தொடங்கப்படுதல் மற்றும் நாட்டில் ஏனைய நவீன சுகாதார நிலையங்கள் நிறுவப்படுவதும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு 3 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதுகிராமங்களில் சுகாதார வசதிகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர் பேசினார். கிராமங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நல்வாழ்வு மையங்கள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்ஏற்கனவே அத்தகைய 80,000 மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வானது உலக சுற்றுலா தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதம மந்திரி சுகாதாரம் என்பது சுற்றுலாவோடு நெருக்கமான உறவில் இருப்பதை எடுத்துக்காட்டினார். ஏனெனில் நமது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும் போது அது சுற்றுலாத் துறையையும் மேம்படுத்தும்.

 

*****