Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு ஆச்சாரியா வினோபா பாவேவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை


திரு ஆச்சாரியா வினோபா பாவேவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்திகளில் தெரிவித்திருப்பதாவது:

தீண்டாமைக்கு முற்றிலும் எதிரானவர், இந்திய விடுதலை குறித்த தமது உறுதித்தன்மையில் மாற்றுக்கருத்து இல்லாதவர், அகிம்சையில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர் மற்றும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்பவர் என்று மகாத்மா காந்தியால் வர்ணிக்கப்பட்டவர். அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர்.

திரு ஆச்சாரியா வினோபா பாவேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதைகள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உயரிய காந்திய சிந்தனைகளை திரு ஆச்சாரியா வினோபா பாவே முன்னெடுத்துச் சென்றார். ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதை அவரது மக்கள் இயக்கங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தன. ஒன்றிணைந்த மனநிலை குறித்த அவரது வலியுறுத்தல் பல தலைமுறையினருக்கு தொடர்ந்து எழுச்சியூட்டும்.”

****