Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவுக்கு பிரதமர் பாராட்டு


டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

தலைசிறந்த சிங்ராஜ் அதானா மீண்டும் நிகழ்த்தி காட்டியுள்ளார். மற்றொரு பதக்கத்தை, இம்முறை கலப்பு 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் எஸ்ஹெச்1 பிரிவில் அவர் வென்றுள்ளார். அவரது இந்த சாதனையை இந்தியா கொண்டாடுகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

*****************