Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை


ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை (பிறந்தநாள்) முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில்,

ஸ்ரீ நாராயண குருவின் ஜெயந்தியன்று அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அவரது போதனைகள், லட்சக்கணக்கானோருக்கு ஆற்றலை அளிக்கிறது‌. கற்றல், சமூக சீர்திருத்தம் மற்றும் சமத்துவம் மீதான அவரது உறுதிப்பாடு தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கிறது. பெண்களின் மேம்பாட்டிற்கும், சமூக மாற்றத்திற்காக இளைஞர்களின் சக்தியை சீர்படுத்துவதற்கும் அவர் பெரும் முக்கியத்துவம் அளித்தார்”, என்று தெரிவித்துள்ளார்.

*****************